Kural

திருக்குறள் #441
குறள்
அறன்அறிந்து மீத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்
குறள் விளக்கம்
அறத்தினுடைய நுண்ணிய தன்மையை அறிந்து தன்னைக் காட்டிலும் அனுபவத்தில் முதிர்ந்த, நீதிநூலையும், உலகியலையும் நன்கு அறிந்தவர்களுடைய உறவை அதன் அருமை, பெருமைகளை ஆராய்ந்தறிந்து அவர்களது ஆற்றலை வெளிக்கொணரும் வழியை அறிந்து அதற்கேற்றபடி செய்து (நடந்து) கொள்ள வேண்டும்.