குறள்
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
குறள் விளக்கம்
தன்னைச் சுற்றியிருப்பவர்களை (அமைச்சர்களை), நாட்டு நிகழ்வுகளைக் காணும் கண்ணாகக் கருதி நாட்டை ஆள்வதால் அரசனானவன் சுற்றியிருக்க வேண்டியவர்களை ஆராய்ந்தறிந்து தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.