Kural

திருக்குறள் #450
குறள்
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
குறள் விளக்கம்
நல்லவர்களுடன் அமைத்துக்கொள்ள வேண்டிய உறவை ஏற்படுத்திக்கொள்ளாமல் விட்டுவிடுதல் என்பது பலருடன் பகைத்துக்கொள்வதைக் காட்டிலும் பத்துப்பங்கு அதிகமான தீமையைத் தந்துவிடும்.