குறள்
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து
குறள் விளக்கம்
உயிர், உலகம், இறைவன், வினைகள் குறித்த ஐயங்களிலிருந்து விடுபட்டு, தெளிந்த அறிவுப்பார்வை உடையவர்களுக்கு இம்மண்ணுலகில், உடலில் உயிர் தரித்திருக்கும் காலத்திலேயே நீக்கமற நிறைந்த வீடுபேறு மிக அருகில் உடையதாகும் (இருப்பதாகும்).