குறள்

அடக்கம் உடைமை
குறள் # 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
குறள் # 122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு
குறள் # 123
செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
குறள் # 124
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
குறள் # 125
எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
குறள் # 126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து
குறள் # 127
யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
குறள் # 128
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகா தாகி விடும்
குறள் # 129
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
குறள் # 130
கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து