குறள்
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
குறள் விளக்கம்
ஒழுக்கம் உடைமையைப் பேணுதலைக் கடைப்பிடித்து விருப்பத்துடன், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அறங்கள் அனைத்திலும் எல்லா நன்மையையும் தரும் அறம் எது என்று ஆராய்ந்து, ஆழ்ந்து சிந்தித்து தெளிந்தறிந்தால் என்றும் தன் உயிருக்குத் துணையாக இருப்பது ஒழுக்கமேயாகும்