குறள்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
குறள் விளக்கம்
நல்ல செயல்களை இடைவிடாது முறையாக செய்தொழுகுதல் நிலையான இன்பத்துக்குக் காரணமாய் அமையும். தீய செயல்களைத் தொடர்ந்து செய்தல் எப்பொழுதும் துன்பத்தைத் தந்து கொண்டேயிருக்கும்.