குறள்
கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
குறள் விளக்கம்
கற்க வேண்டிய நூல்களைக் கற்று, கோபம் தோன்றாமல் (உள்ளத்தை அமைதியின்கண்) பாதுகாத்து, கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிப்பவனின் வாழ்க்கையை அறக்கடவுள் அறவாழ்வில் நிலைத்திருக்கும் வண்ணம் வலிந்து பாதுகாக்கும்.