குறள்
யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
குறள் விளக்கம்
(தன்னால்) எதனையும் கட்டுப்படுத்த இயலவில்லையாயினும் நாக்கினையாவது கட்டுப்படுத்த முயல்வாராக! நாக்கினைக் கட்டுப்படுத்த முயலவில்லையெனில் சொல்லினால் ஏற்படும் குறைகளால் தாங்களே துயரத்தால் வருந்துவர்.