குறள்
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
குறள் விளக்கம்
ஒருவனை ஒருவன் நெருப்பால் சுட்ட புண்ணானது (உடம்பில் இருந்தாலும்) மனத்தினிடத்து (அப்போதே) ஆறிப்போம். (அப்படியில்லாமல்) தீயசொற்களையுடைய நாவினால் சுட்ட வடுவானது (அம்மனத்தினிடத்து எப்போதும்) ஆறவே ஆறாது.