குறள்
இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது
கைசெய்துஊண் மாலை யவர்
குறள் விளக்கம்
(தமது) கையினால் உழுதலைச் செய்து உண்ணுதலை இயல்பாக உடையவர்ர், தாம் எவரிடமும் சென்று எதையும் கேட்டுப் பெற மாட்டார். (ஆனால்) தம்மிடம் வந்து கேட்பவருக்கு அவருக்கு வேண்டிய ஒன்றை மறைக்காமல் கொடுப்பார்.