Kural

திருக்குறள் #1038
குறள்
ஏரினும் நன்றால் எருஇடுதல்; கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு
குறள் விளக்கம்
ஏர் உழுதலைக் காட்டிலும் (நிலத்தில்) எரு இடுதல் நல்லது. களைகளை நீக்கிய பிறகு, நீர் பாய்ச்சுதலைக் காட்டிலும் பயிரைக் காத்தல் நல்லது.