Kural

திருக்குறள் #1040
குறள்
இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்
குறள் விளக்கம்
தம்மிடம் பொருள் இல்லை என்று எண்ணி (வறுமையால்) சோம்பி இருப்பவரைக் கண்டால் நிலம் என்று உயர்த்திச் சொல்லப்படுகின்ற நல்லவள் தனக்குள் சிரித்துக்கொள்வாள்.