Kural

திருக்குறள் #1031
குறள்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை
குறள் விளக்கம்
உலகம் வேறுவகையான தொழில்களைச் செய்து திரிந்தாலும் ஏருடைய உழவர்களையே சார்ந்துள்ளது. ஆகவே எவ்வளவு துன்பத்தைக் கொடுத்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.