உட்பகை
குறள் # 881
நிழல்நீரும் இன்னாத இன்னா; தமர்நீரும் இன்னாஆம் இன்னா செயின்
குறள் # 882
வாள்போல் பகைவர் அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு
குறள் # 883
உட்பகை அஞ்சித்தற் காக்க; உலைவுஇடத்து மண்பகையின் மாணத் தெறும்
குறள் # 884
மனம்மானா உட்பகை தோன்றின் இனம்மாணா ஏதம் பலவும் தரும்
குறள் # 885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும்
குறள் # 886
ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது
குறள் # 887
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி
குறள் # 888
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி
குறள் # 889
என்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு
குறள் # 890
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று

