குறள்

படைச்செருக்கு
குறள் # 771
என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்! பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்
குறள் # 772
கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
குறள் # 773
பேராண்மை என்ப தறுகண்;ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு
குறள் # 774
கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
குறள் # 775
விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு
குறள் # 776
விழிப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து
குறள் # 777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து
குறள் # 778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்
குறள் # 779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர் ?
குறள் # 780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து