குறள்

படைமாட்சி
குறள் # 761
உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை
குறள் # 762
உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவுஇடைத்துத்
தொல்படைக்கு அல்லால் அறிது
குறள் # 763
ஒலித்தகால் என்ஆம் உவரி எலிப்பகை ?
நாகம் உயிர்பக் கெடும்
குறள் # 764
அழிவுஇன்றி அறைபோகாது ஆகி, வழிவந்த
வன்க ணதுவே படை
குறள் # 765
கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை
குறள் # 766
மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
குறள் # 767
தார்தாங்கிச் செல்வது தாரண தலைவந்த
போர்தாங்குந் தன்மை அறிந்து
குறள் # 768
அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை
படைத்தகை யாற்பாடு பெறும்
குறள் # 769
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை
குறள் # 770
நிலைமக்கள் சாலவிடைத் தெனினுந் தானை
தலைமக்கள் இல்வழி இல்