Kural

திருக்குறள் #766
குறள்
மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
குறள் விளக்கம்
பகைவரை அஞ்சாது தாக்கும் வீரமும், தாழ்வு வராமல் காக்கும் மான உணர்ச்சியும், பரம்பரையாக வந்த வீரர்கள் சென்ற நல்வழியில் செல்லுதலும், மன்னனது மாறாத நம்பிக்கைக்குரியதும் ஆகிய இந்த நான்குமே படைக்குப் பாதுகாப்பாக இருக்கும் தன்மையாகும்.