Kural

திருக்குறள் #765
குறள்
கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை
குறள் விளக்கம்
எமனே கோபம் கொண்டு தன்னைத் தாக்குவதற்கு வந்தாலும் எல்லோரும் மனம் ஒத்து ஒன்று கூடி எதிர் நின்று தாக்கும் வலிமையுடையதே சிறந்த படையாகும்