குறள்
உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை
குறள் விளக்கம்
படைகளுக்குரிய யானை முதலிய நான்கு வகை உறுப்புகளாலும் நிறைந்திருந்து போரில் ஏற்படும் துன்பங்களுக்கு அஞ்சாமல் நின்று பகைவரை வெற்றி கொள்ளும் படையானது அரசனுடைய செல்வங்கள் அனைத்திலும் முதன்மையான செல்வமாகும்.