Kural

திருக்குறள் #769
குறள்
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை
குறள் விளக்கம்
தனது படையை விட்டு ஒவ்வொருவராகச் செல்வதால் தனது படை தேய்த்து சிறுபடையாவதும் மனதிலிருந்து நீங்காத வெறுப்பும் தரித்திரமும் இல்லாதிருக்கக்கூடிய படையானது பகைவரை வெல்லக்கூடியதாகும்.