searchresults போதை குறள் எண் 921 உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும் கள்காதல் கொண்டுஒழுகு வார் குறள் எண் 922 உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரான் எண்ணப் பட வேண்டா தார் குறள் எண் 923 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி? குறள் எண் 924 நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்என்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு குறள் எண் 925 கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்அறி யாமை கொளல் குறள் எண் 926 துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுஉண்பார் கள்உண் பவர் குறள் எண் 927 உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய் பவர் குறள் எண் 928 களித்துஅறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் குறள் எண் 929 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைக் தீத்துரீஇ யற்று குறள் எண் 930 கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணும்கால் உள்ளாங்கொல் உண்டதன் சோர்வு சில எடுத்துக்காட்டு வார்த்தைகள் Knowledge பண்பு பணிவு தெய்வம் மானம் God அன்பு மனம் வறுமை தேடக்கூடிய அனைத்து வார்த்தைகளும் அறிய