குறள்
களித்துஅறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்
குறள் விளக்கம்
(மறைந்திருந்து கள்ளைக் குடித்துவிட்டு) (தான்) கள்ளைக் குடிக்கவில்லை என்று கூறுவதை விட்டுவிட வேண்டும். (ஏனென்றால்), கள்ளைக் குடித்த பிறகு மனதில் மறைத்துவைத்த குற்றங்கள் யாவும் (முன்னைக்காட்டிலும்) மிகுதியாக வெளிப்பட்டுவிடும்.