குறள்
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச் சொல்லுவார்
குறள் விளக்கம்
கற்று அறிந்தவரது சபையினிலே, அஞ்சாமல் தாம் கற்ற வித்தைகளை, அக்கற்றவர் மனதினில் நன்கு பதியும் வகையில் எடுத்துச் சொல்லும் ஆற்றலுள்ளவர், இவரே கற்றவர் அனைவருக்குள்ளும் நன்றாகக் கற்றவர் என்று உலகத்தவர்களால் சிறப்பித்துப் பேசப்படுவர்.