குறள்
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
குறள் விளக்கம்
(தலைவன் இடைவிடாது மேற்கொள்ளும்) முயற்சியானது (நாட்டின் அல்லது நிறுவனத்தின் அல்லது குடும்பத்தின்) செல்வத்தை (அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு) இன்பமுடையதாக ஆக்கி வளர்க்கும் முயற்சியற்ற தன்மை செல்வமின்மையைத் (வறுமையை) தோற்றுவித்து வளர்ச்சியை அழித்துத் துன்பமுடையதாக ஆக்கிவிடும்.