Kural

திருக்குறள் #338
குறள்
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு
குறள் விளக்கம்
உடம்புடன் உயிர்க்குள்ள பிணைப்பானது பிரியாமலிருந்தமுட்டை தனியாக இருக்கும்படி நீங்கச் செய்து முட்டையினுள்ளிருந்த பறவை பருவம் வந்தவுடன் பறந்துவிடுவதைப் போன்றதாகும்.