குறள்
நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை
குறள் விளக்கம்
துறவு வாழ்க்கையை மேற்கொள்பவருக்கு நிலையற்றவைகளை (உறவு, செல்வம், உடல் ஆகியவற்றை) நிலையானது என்று கருதுகின்ற மிகச்சிறிய அறிவுடையவராயிருக்கும் தன்மை தாழ்ந்த நிலையைத் தரும். (துறவு நிலைக்குப் பொருந்தாததாகிவிடும்).