Kural

திருக்குறள் #257
குறள்
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்
குறள் விளக்கம்
புலால் என்பது வேறோர் உயிரினுடைய புண்ணாகும். அதனைப் புண் என்று உணர்பவர்கள், அவ்வாறு உணர்ந்த பிறகு உண்ணாது விட்டுவிடுவார்கள்.