பொருள்செயல்வகை
குறள் # 751
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்
குறள் # 752
இல்லாரை எல்லோரும் எள்ளுவர்; செல்வரை எல்லோரும் செய்வர் சிறப்பு
குறள் # 753
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று
குறள் # 754
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதுஇன்றி வந்த பொருள்
குறள் # 755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம் புல்லார் புரள விடல்
குறள் # 756
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னாத் தெறுபொருளும் வேந்தன் பொருள்
குறள் # 757
அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும் செல்வச் செவிலியால் உண்டு
குறள் # 758
குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்னகைத்துஒன்று உண்டாகச் செய்வான் வினை
குறள் # 759
செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல்
குறள் # 760
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு

