Kural

திருக்குறள் #752
குறள்
இல்லாரை எல்லோரும் எள்ளுவர்; செல்வரை
எல்லோரும் செய்வர் சிறப்பு
குறள் விளக்கம்
எல்லா நன்மையும் உடையவராயிருந்தாலும் பொருள் இல்லாதவர்களை எல்லோரும் இகழ்ந்து அவமதிப்பார்கள். எல்லாத் தீமையும் உடையவராயிருந்தாலும் அந்தப் பொருள் உடையவர்களை எல்லோரும் உயர்வுபடுத்தி மதிப்பார்கள்.