குறள்
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று
குறள் விளக்கம்
பொருள்செல்வம் என்று அனைவராலும் சிறப்பாகச் சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கானது அப்பொருளை அடையப் பெற்றவர்களுக்கு அவர் நினைத்த இடத்திற்குச் சென்று அங்குள்ள பகையாகிய இருளை அழித்துவிடும்.