Kural

திருக்குறள் #960
குறள்
நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும்; குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
குறள் விளக்கம்
நன்மையை விரும்பினால் பழிபாவங்களுக்கு அஞ்சும் நாணத்தை உடையவனாக இருக்க வேண்டும். குலத்தின் உயர்வை அடைய விரும்பினால் எல்லோரிடத்திலும் பணிவை வெளிப்படுத்த வேண்டும்.