Kural

திருக்குறள் #952
குறள்
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்
குறள் விளக்கம்
நற்குடியில் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மை, பழிபாவங்களுக்குக் கூசுகின்ற நாணம் ஆகிய இவை மூன்றையும் (எக்காரணத்தாலும்) தாமாக விட்டுவிலாகார்.