உங்களுக்குத் தெரியுமா?
திருக்குறளில் விதியைப் பற்றிக் கூற, ஊழ் என்ற அதிகாரம் மட்டுமே உள்ளது. ஆனால் மனித முயற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்த ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, மடியின்மை, இடுக்கண் அழியாமை ஆகிய நான்கு அதிகாரங்கள் உள்ளன. இதிலிருந்து முயற்சியின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ளலாம்.