குறள்
ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
குறள் விளக்கம்
செயற்கரிய செயல்களைச் செய்து முடிப்பவரின் வலிமையானது, எல்லோரிடத்திலும் பணிவோடு இருத்தலாகும். அப்பணிவே சால்பாகிய நிறைகுணத்தை உடையவர் பகைவரை திருந்தச் செய்கின்ற கருவியாகும்.