குறள்
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற
குறள் விளக்கம்
ஒருவனுக்கு அணியாக விளங்குவது, பணிவு என்னும் நற்குணத்தை உடையவனாகவும் (அனைவரிடத்திலும்) இனிமையான சொற்களை கூறுபவனாகவும் இருப்பதுதான் ஆகும். (இவ்விரண்டிற்கும் வேறான உடம்பில் அணியும்) அணிகலன்கள் அணிகலன்களே அல்ல.