குறள்
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
குறள் விளக்கம்
அனைவரிடத்திலும் இன்பத்தை அதிகமாக உண்டுபண்ணக்கூடிய இனிமையான சொற்களைப் பேசுபவர்களுக்கு, துன்பத்தை அதிகமாக உண்டு பண்ணக்கூடிய வறுமை (பொருள் நுகர்ச்சியின்மை) வராது.