Kural

திருக்குறள் #92
குறள்
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
குறள் விளக்கம்
ஒருவரைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து அவரது உள்ளம் இன்பம் பெறும் வண்ணம் இனிமையான சொற்களைக் கூறுபவனாக ஒருவன் இருப்பான் எனில் அது மனம் மகிழ்ந்து பொருட்களை வழங்குவதைக் காட்டிலும் நல்லதே.
குறள் விளக்கம் - ஒலி