Kural

திருக்குறள் #785
குறள்
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
குறள் விளக்கம்
ஒருவரோடு ஒருவர் நட்பாவதற்கு ஓரிடத்தில் சேர்ந்திருப்பதோ அடிக்கடி கண்டு பழகுவதோ அவசியமில்லை. ஆனால் இருவருக்கும் ஒரே மாதிரியான உணர்ச்சிகள் இருப்பதே நட்பு என்ற உரிமையைக் கொடுக்கும்.