Kural

திருக்குறள் #786
குறள்
முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
குறள் விளக்கம்
கண்டவுடன் மனம் மகிழாமல் முகத்தில் மட்டுமே மகியவைக் காட்டும் வகையில் நட்புக் கொள்வது நட்பாகாது. நெஞ்சம் நிறைந்த அன்பினால் மனமும் மகிழ்வுறும் வண்ணம் நட்புக் கொள்வதே உண்மையான நட்பு எனப்படும்.