குறள்
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
குறள் விளக்கம்
நட்பினைப் போல தேடி வைத்துக் கொள்ளக் கூடிய அரிய பொருள்கள் எவை இருக்கின்றன? அவ்வாறு நட்பினைத் தேடி வைத்துக் கொண்டால் அதுபோல பகைவரால் வரும் எதிர்ச் செயல்களை அழித்துச் சிறந்த பாதுகாப்பினைத் தரக்கூடியவை வேறு எவை இருக்கின்றன? எதுவும் இல்லை என்பது கருத்து.