குறள்
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
குறள் விளக்கம்
அறிவுடைய நல்லோருடன் நட்புக் கொள்வது வளரும் பிறைச்சந்திரன், வளர்ந்து முழுமையடைவது போல நாள்தோறும் வளர்ந்து நிறைவைத் தரும் தன்மையுடையதாகும். அறிவில்லாத பொல்லாதவரிடம் ந்ட்புக் கொள்வது முழு நிலவு நாள்தோறும் தேய்ந்து குறைந்து கொண்டே போகும் தன்மை உடையதாகும்.