குறள்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
குறள் விளக்கம்
அன்பு எனும் பண்பை உடைமையாகக் கொள்ளாதவர்கள், (சுயநலம் விரும்பி) அனைத்தையும் தங்களுக்கே பயன்படும்படி செய்து கொள்வார்கள். அன்பு எனும் பண்பை வளர்த்து உடைமையாகக் கொண்டவர்கள் (பொதுநலம் விரும்பி) தங்களின் எலும்பும் கூட பிறருக்குப் பயன்படும்படிச் செய்து கொள்வார்கள்.