Kural

திருக்குறள் #71
குறள்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்
குறள் விளக்கம்
அன்பினுக்கும் அடைத்து வைக்கின்ற தாழ்ப்பாளும் இருக்கின்றதோ? (பிறரது துன்பத்தைக் காணும்பொழுது) அன்புடையவர் பொழியும் புன்மையான கண்ணீரே அவர் அன்பை அனைவருக்கும் உணர்த்திவிடும்.
குறள் விளக்கம் - ஒலி