குறள்
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
குறள் விளக்கம்
தன் தகப்பனாருக்கு மகனொருவன் திருப்பிச் செய்ய வேண்டிய நன்றிக்கடன் (கடமை என்பது) இவனுடைய தகப்பனார் (இவனை மகனாகப் பெறுவதற்கு) என்ன நோன்பினைச் (தவத்தை, புண்ணியத்தைச்) செய்தாரோ என்ற சொல்லினைப் (பெரியோர்கள்) புகழ்ந்து கூறும் செயலாகும்.