Kural

திருக்குறள் #69
குறள்
ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
குறள் விளக்கம்
தனது மகனை உயர்ந்த பண்பாளன் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்ட தாய், பெற்றெடுத்த காலத்தில் மகிழ்ந்ததைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியை (என்றும்) உடையவளாவாள்.