Kural

திருக்குறள் #66
குறள்
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
குறள் விளக்கம்
தமது குழந்தைகளுடைய மழலைச் சொற்களை கேட்டறியாதவர்கள், குழலிசை இனிதாக இருக்கின்றது, யாழிசை இனிதாக இருக்கின்றது என்று கூறுவார்கள்.