Kural

திருக்குறள் #65
குறள்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்; மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
குறள் விளக்கம்
குழந்தைகளின் உடலை அணைத்துக் கொள்வதால் உடம்புக்கு இன்பமுண்டாகும். மேலும், அவர்களுடைய இனிய சொற்களைக் கேட்பதால் காதுகளுக்கு இன்பமுண்டாகும்.