Kural

திருக்குறள் #62
குறள்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்
குறள் விளக்கம்
குழந்தைகள் நல்லோர்களால் பழிக்கப்படுவனவற்றில் நாட்டமில்லாத நற்பண்புகளை உடையவர்களாக, பெற்றோர்களால் வளர்க்கப்படுவார்களானால் (அப்பெற்றோர்களுக்கும், அக்குழந்தைகளுக்கும்) எந்த சூழ்நிலைகளிலும் துன்பங்கள் உள்ளத்தை வருத்தமாட்டா.