Kural

திருக்குறள் #60
குறள்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
குறள் விளக்கம்
நல்ல மாண்புகளைக் கொண்ட மனைவியே வீட்டிற்கு அல்லது கணவனுக்குச் சிறந்த நன்மையளிக்கும் திருமகள் என்று அறிஞர் பெருமக்கள் கூறுவர். அவ்விருவருக்கும் அதாவது கணவன் மனைவி இருவருக்கும் சிறந்த அணிகலன் நற்பண்புகள் நிறைந்த குழந்தைகளைப் பாக்யமாகப் பெறுவதாகும்.
குறள் விளக்கம் - ஒலி